• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிஎஸ்பி பிளக்ஸி கேப் பண்ட்25 ஆண்டுகளை நிறைவு செய்ததுஆண்டுக்கு 19.1 சதம் கூட்டு வளர்ச்சி விகிதத்தில் பலன்

May 12, 2022 தண்டோரா குழு

டிஎஸ்பி முதலீட்டு மேலாளர்கள், டிஎஸ்பி பிளக்ஸி கேப் நிதி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை அறிவித்துள்ளனர்.1997ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி துவக்கப்பட்ட இந்த நிதியானது, பல்வேறு பங்குச் சந்தை ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துள்ளது.

துவங்கப்பட்ட நாளிலிருந்து ஆண்டு வளர்ச்சி விகிதத்தால் 19.1 சதம் பலனை அளித்துள்ளது. அப்போது ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால், அது தற்போது 78 லட்ச ரூபாயாக வளர்ச்சி பெற்றிருக்கும். இதே கால அளவில் நிப்டி 500 டிஆர்ஐ வளர்ச்சி 31.74 லட்சம் ரூபாயாக உள்ளது.

டிஎஸ்பி பிளக்ஸி கேப் பண்ட், வணிக வளர்ச்சி, கவனமிக்க மேலாண்மை, நிலையான வளர்ச்சி (பிஎம்ஜி பிரேம் ஒர்க்) போன்ற கட்டமைப்புகளைக் கொண்டு அணுகுமுறையை கொண்டது. குறைவான முதலீட்டில் வேகமான பண மாற்றம், சந்தை பங்கில் உயர்வு, சரியான முதலீட்டு பகிர்வு மற்றும் உயர்ந்த அளவு மார்ஜின் ஆகியவற்றால் பங்கு வருவாய் கணிசமாக உயர்ந்தது. மற்றும் லாப வளர்ச்சியும் அதிகமாக இருந்தது.

டிஎஸ்பி பிளக்ஸி கேப் பண்ட் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டு வளர்ச்சி விகிதம் குறைந்தபட்சம் 6.9 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 33.5 சதவீதமாக இருந்தது. பங்குகளைப் போலவே ஒட்டுமொத்த மதிப்பில் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருந்தது. பொறுமையாக காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு நல்ல வளர்ச்சியை அளித்துள்ளது. டிஎஸ்பி பிளக்ஸி கேப் நிதியை, அடுல் போலே மற்றும் அபிஷேக் கோஷ் ஆகியோர் நிர்வகித்தனர்.

டிஎஸ்பி முதலீட்டு மேலாளர்கள் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கல்பென் பரெக் பேசுகையில்,

“டிஎஸ்பி பிளக்ஸி கேப் பண்ட், ஒரு ஒழுங்கு முறையான முதலீட்டு வரையறையை கொண்டிருந்தது. பல்வேறு பங்கு ஏற்றத்தாழ்வு சுற்றுக்களை சந்தித்தது. நல்ல வணிக முறையை தேர்வு செய்து, பங்கு சந்தையில் முதலீட்டை முதலீட்டாளர்களின் விரும்பிய வகையில் மேற்கொண்டது. இந்த நீண்ட கால முதலீட்டில் 36 முதலீட்டாளர்கள் மட்டுமே தற்போதும் முதலீடு செய்து வருகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து முதலீடு செய்து வந்த பல லட்சம் முதலீட்டாளர்கள், சிபாரிசு செய்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களுக்கு மிக்க நன்றி. இந்த பரவசமுட்டும் புதிய பயணத்தில் தொடரும் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவுக்காகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.

மேலும் படிக்க