• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் பார் டெண்டர் கிடைக்காதவர்களே விரக்தியில் தவறான தகவலை பரப்புகிறார்கள் – அமைச்சர் செந்தில் பாலாஜி

January 5, 2022 தண்டோரா குழு

டாஸ்மாக் பார் டெண்டர் கிடைக்காதவர்களே விரக்தியில் தவறான தகவலை பரப்புவதாக கோவையில் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை இராமநாதபுரம் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தமிழ்நாடு முதலமைசர் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இதனைதொடர்ந்து சென்னைக்கு அடுத்த படியாக அதிக குடும்ப அட்டை உறுப்பினர்கள் கொண்ட கோவையில் இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளேன். உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்ட விவசாயிகள் நிலத்திற்கான இழப்பீட்டை தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்ட்வர்கள் விபரங்களை கொடுத்தால் இழப்பீடு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

டாஸ்மாக் பார் டெண்டர் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் டாஸ்மாக் டெண்டரில் பார் கிடைக்காதவர்கள் விரக்தியில் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என குற்றம் சாட்டினார்.பார் நடத்தும் வசதி இருந்தும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்கள் டெண்டர் விடப்படாமலே சிலர் நடத்தி வந்தனர் எனவும் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய நிலையில் அவைகள் எல்லாம் முறைப்படுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் ஜல்லிக்கட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படியே நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

மேலும் படிக்க