May 7, 2020
தண்டோரா குழு
டாஸ்மாக் கடைகள் திறந்தை கண்டித்து 82வது வார்டு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா நோய்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்தன.இதற்கிடையில், தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.இதற்கு பல்வேறு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அத்துடன்,எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிராக,கருப்பு சின்ன போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும்
திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு கொடி ஏந்தியும், தனிமனித விலகலை கடைப்பிடித்தவாறு,கண்டனக் குரல் எழுப்பி வருக்கின்றனர். இந்நிலையில், கோவை திமுக 82வது வட்டகழகம் சார்பில் டாஸ்மாக் கடைகளை திறந்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,82வது வட்டகழக பொறுப்பாளர் வி.ஐ. பதுருதீன், மாநகர மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ்,முன்னாள் வட்ட கழக செயலாளர் எல்.எம்.அப்துல் ரஹீம்,
தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் முகமது சன்பர், மீன் அப்பாஸ்,சி.எம்.எஸ். இஸ்மாயில், லேனா ரியாஸ், சி.எம்.எஸ். பசுருல்லாஹ், முன்னாள் வட்ட கழக செயலாளர் எல்.எம்.அப்துல் ரஹீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று முகக் கவசங்கள் அணிந்து மத்திய அரசை கண்டித்து மாநில அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று கோவையில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.