May 6, 2020
தண்டோரா குழு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது. அதில் தடை செய்யப்படாத பகுதிகளுக்கு தளர்வு அறிவித்து அரசு தொழில்கள் நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கும் சில கட்டுபாடுகளுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது.இதற்கு பல கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.அதன் தொடர்ச்சியாக தமிழ் புலிகள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்களது வீட்டின் முன்பு நின்ற போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக கோவையில் இன்று தமிழர் கட்சியினர் அவர்கள் வீட்டின் முன்பு நின்று டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளியுடன் என்று முகக் கவசங்கள் அணிந்து டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தபடி முழக்கங்களை எழுப்பினர். ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து வேலையின்றி தவிக்கும் மக்கள் இருக்கையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும் டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து தமிழக அரசு பல்வேறு யோசனைகளை முதலில் எடுத்திருக்க வேண்டும் என்றும் தற்போது இந்த வைரஸ் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து யோசிக்க வேண்டும் அதனை தவிர்த்து டாஸ்மாக் கடைகள் திறப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறினர்.