May 7, 2020
தண்டோரா குழு
டாஸ்மாக் கடைகளை திறந்ததை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில இடங்களில் மட்டும் தளர்வுகளை அறிவித்து அப்பகுதிகளில் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது அதன்படி இன்று முதல் டாஸ்மாக் கடையை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்தது. அந்தந்த டாஸ்மார்க் கடைகளில் முன்பு தடுப்பு வேலிகள் அமைத்து அனைவரும் சில கட்டுப்பாடுகளுடன் மதுக்கடை வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.. அதற்கு தகுந்தவாறு ஏற்பாடுகளும் காவல்துறையினர் செய்திருந்தனர்.
இதனை கண்டித்து பல்வேறு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அந்த வகையில் இன்று கோவை மாவட்டம் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் அவர் வீட்டின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதில் திமுக தொண்டர்களும் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமூக இடைவெளி விட்டு நின்று முகக் கவசங்கள் அணிந்து மத்திய அரசை கண்டித்து மாநில அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதேபோன்று கோவையில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது என்றும் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.