• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் கடைகளைமூட வேண்டும் – மு.க.ஸ்டாலின்

May 20, 2017 தண்டோரா குழு

தாய்மார்கள் மூடக்கோரும் டாஸ்மாக் கடைகளை எவ்வித மறுப்புமின்றி உடனடியாக மூட வேண்டும் என்றுசட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகில் உள்ள அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் ‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுக்கடைகளை எதிர்த்துப் போராடும் மகளிருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் போலீசாரின் வன்முறைகளை காணும்போது, தமிழக காவல்துறை தலைவர் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் அந்த இலாகா இருக்கின்றதா,குறைந்தபட்சம் முதல்வரின் கட்டுப்பாட்டிலாவது காவல்துறை இருக்கின்றதா என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறது.

ஒரு முதலமைச்சர் குடியிருந்த ‘கொடநாடு எஸ்டேட்’ காவலாளியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானது மட்டுமல்ல,அந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் குற்றவாளிகளின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல்,அடுத்தடுத்து நடக்கும் மர்ம விபத்துக்கள் போன்ற நிகழ்வுகள், ,திறமைமிக்க தமிழக காவல்துறை “மாலுமி” இல்லாத கப்பல் போல இன்றைக்கு தரைதட்டி நிற்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

தமிழக காவல்துறையின் உளவுத்துறை, சட்டம் – ஒழுங்கு, போலீஸ் சீருடை பணியாளர் வாரியம் உள்ளிட்ட மூன்று துறைகளுக்கு ஒருவரே ’டி.ஜி.பி’ பொறுப்பு வகிக்கும் நிலைமை ஏற்பட்டு இருப்பது உட்பட காவல்துறையில் இப்போது நடந்துவரும் பலவித நிர்வாக அலங்கோலங்கள், ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையாக விளங்கி வந்த தமிழக காவல்துறைக்கு சோதனையை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுக்கடைகளுக்கு எதிரான மகளிர் போராட்டங்களில் மனித உரிமைகளுக்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் உட்பட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தாய்மார்கள் மூடக்கோரும் டாஸ்மாக் கடைகளை எவ்வித மறுப்புமின்றி உடனடியாக மூட வேண்டும் என்றுமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க