September 21, 2017 
தண்டோரா குழு
                                ஜெர்மனி நாட்டிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் பெல்ஜியம் நாட்டின் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
முதலாம் உலகப்போரின் போது, ஜெர்மனி பயன்படுத்திய நீர்மூழ்கி கப்பல் பெல்ஜியம் நாட்டின் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை(செப்டம்பர் 19) கண்டுபிடிக்கப்பட்டது. 
அட்லாண்டிக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பல் மிகவும் தனித்துவமானது. இந்த நீர்மூழ்கி கப்பலின் முன் பகுதிகள் அதிகமாக சேதம் அடைந்துள்ளது.இந்த கப்பலை உடைத்து பார்த்த போது, அதில் 23 பேருடைய உடல்கள் இருந்தன.இந்த கப்பல்  யுபி இரண்டாம்  வகையை சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது.இந்த கப்பல் எதிரி நாடுகள் கடல் பகுதியில் வைத்திருந்த வெடிகுண்டின் மேல், மோதியிருக்க கூடும் என்று கருதப்படுகிறது.