• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெர்மனியில் மக்கள் மீது லாரி மோதி 12 பேர் பலி, 48 பேர் படுகாயம்

December 20, 2016 தண்டோரா குழு

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தையில் ஒரு லாரி புகுந்து மோதியதில் 12 பேர் பலி 48 பேர் படுகாயமடைந்தனர்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை உலகமெங்கும் விரைவில் கொண்டாடப்படவுள்ளன. கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்ககூடிய நாடுகளில் பண்டிகையைக் கொண்டாட மக்கள் இனிப்புகள், பட்டாசுகள், புத்தாடைகள், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பொருள்கள் வாங்க கடைகளுக்கும், சந்தைக்கும் செல்வது வழக்கம்.

ஜெர்மனி தலைநகரான பெர்லினில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பொருட்களை வாங்க சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. திடீரென்று அந்தக் கூட்டத்தில் ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து புகுந்தது. கூடியிருந்த பொதுமக்கள் மீது அந்த லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். 48 பேர் படுகாயம் அடைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் பெற்ற பெர்லின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து பெர்லின் காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

கிறிஸ்துமஸ் காலத்தில் இது போன்ற சம்பவம் நேர்ந்தது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இதற்கு காரணமான குற்றவாளியைச் சம்பவ இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த வாகனத்தை ஓடியவர் கடந்த பிப்ரவரி மாதம் ஜெர்மனி நாட்டில் தஞ்சம் புகுந்தவர் என்றும் அந்த வாகனம் போலந்து நாட்டில் பதிவு செய்யப்பட்டது என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இச்சம்பவம் திட்டமிட்ட தாக்குதலாக கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க