• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெராக்ஸ் எடுக்கும் நேரத்தில் இரு சக்கர வாகனம் களவு – போலீசார் விசாரணை

May 4, 2023 தண்டோரா குழு

கோவை அரசூர் பகுதியைச் சார்ந்த விஷ்ணுவர்தன். தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 24ம் தேதி ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒண்டிப்புதூர் அரசு பள்ளி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு ஜெராக்ஸ் கடைக்குள் சென்றுள்ளார்.

ஜெராக்ஸ் எடுத்து விட்டு திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாமல் போய் இருந்துள்ளது. இருசக்கர வாகனம் நிறுத்தி சென்ற 5 நிமிடத்திற்கு உள்ளாக காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த இவர் தாமாக இருசக்கர வாகனத்தை இத்தனை நாட்களாக தேடி வந்துள்ளார். இருப்பினும் வாகனம் கிடைக்காத நிலையில் நேற்றைய தினம் இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இருசக்கர வாகனம் திருடு போன போது பதிவான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க