November 10, 2017
தண்டோரா குழு
ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர். அலுவலகங்கள் மற்றும் தினகரன் உள்ளிட்டோர் வீடுகளில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடு அலுவலகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நமது எம்.ஜி.ஆர்.அலுவலகம்,ஜெயா டிவி சி.இ.ஓ விவேக்,அவரது சகோதரி கிருஷ்ணப்பிரியா,இளவரசியின் மகன் விவேக் வீடு, மன்னார்குடியில் உள்ள திவாகரன் வீடுமற்றும் அவரது கல்லூரி,சசிகலாவின் உறவினர் வெங்கடேஷ் வீடு,ஜாஸ் சினிமாஸ்,ஜெயலலிதாவின் மருத்துவர் சிவகுமார் இல்லம்,மற்றும் கொடநாடு எஸ்டேட் ஆகிய இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.