• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக ஆடிட்டர் குருமூர்த்திக்கு சம்மன்

June 21, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி ஜூன் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்தது. இதையடுத்து,தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.

இதனைத்தொடர்ந்து,ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இதற்கிடையில்,ஜூன் 25 மருத்துவர் சிவக்குமார்,26-ம் தேதி மருத்துவர் நளினி,செவிலியர் பிரேமா ஆன்டனி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.மேலும்,ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.2வது முறையாக ஆணையத்தின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க