October 30, 2017
தண்டோராகுழு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக விசாரணை கமிஷன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கூறியுள்ளர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது.இதையடுத்து இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ஆறுமுகசாமி பொறுப்பேற்றுக்கொண்டதும் அக்டோபர் 30ம் தேதி விசாரணை தொடங்கும் என்றும் போயஸ் கார்டனில் இருந்தும் விசாரணை தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனால் இன்று விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் துவங்க வில்லை.
இது குறித்து ஆறுமுக சாமி கூறும்போது,2 நாட்களுக்கு பிறகு விசாரணை நடத்தப்படும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் மரணம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட புகார் கடிதங்கள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.