• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ.1.17 கோடி செலவு

December 18, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது உணவுக்காக மட்டும் ரூ.1.17 கோடி செலவானதாக அப்போலோ மருத்துவமனை ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில்அப்போலோ மருத்துவமனை ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான தகவல்களை தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அனைத்திற்கும் ஆன செலவு பட்டியல் வெளியாகியுள்ளது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்துள்ளார்.

சிகிச்சை நாட்களில் ஜெயலலிதாவிற்கு உணவுக்காக மட்டும் ரூ.1.17 கோடி செலவாகியுள்ளதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மருத்துவ செலவு – ரூ1.92 கோடி

மருத்துவர்கள் செலவு – ரூ2.21 கோடி

அறை வாடகை – ரூ1.24 கோடி

உணவு – ரூ1.17 கோடி

இஞ்னியரிங் செலவு – ரூ30.68 லட்சம்

மொத்த செலவு – ரூ6.85 கோடி

லண்டன் மருத்துவர் பீலேவுக்கு ரூ.92.07 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து பிஸியோ சிகிச்சை அளித்த மருத்துவனைக்கு ரூ.1.29 கோடி செலவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அதிமுக சார்பில் 6 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 46.44 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க