• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கங்கனா ரணாவத்

December 5, 2019 தண்டோரா குழு

ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்கிற தலைப்பில் படமாகிறது. இப்படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையில் சினிமா, அரசியல் என்று பல்வேறு கட்டங்கள் இருப்பதால், ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு தோற்றங்களில் வருகிறார்.அரவிந்த் சாமி இப்படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் ஜெயலலிதாவுடன் நடித்துள்ள பிரபல நடிகர்களின் கதாபாத்திரங்களும் இடம்பெற உள்ளன.இந்நிலையில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதனையடுத்து, தலைவி படக்குழுவும் ஷூட்டிங்கை சிறிது நேரம் நிறுத்தி வைத்து மௌன அஞ்சலி செலுத்திவிட்டு, ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவாக நடிக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் படிக்க