• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதாவின் ஆன்மா வழிவகுத்துள்ளது – ஒ.பன்னீர்செல்வம்

August 21, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதாவின் ஆன்மாவே அணிகளை இணைக்க வழிவகுத்துள்ளது என்று முன்னாள் முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறுகையில்,

“நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க தொண்டர்களின் விருப்பத்துக்கிணங்க இணைந்திருக்கிறோம்.

இந்த இணைப்புக்கு உதவிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு நன்றி. உங்கள் அனைவரையும் மீண்டும் காண ஜெயலலிதாவின் ஆன்மா வழிவகுத்துள்ளது.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்நாள் முழுவதும் இயக்கத்துக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். அதிமுகவின் சாதாரண தொண்டனாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இன்றுடன் என் மனபாரம் குறைந்துவிட்டது” என்றார்.

மேலும் படிக்க