July 13, 2020
தண்டோரா குழு
ஜூலை 31ம் தேதி வரை தமிழகத்தில் பஸ் போக்குவரத்து கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை 15ம் தேதி வரை நிறுத்தப்பட்டது. தற்போது, ஜூலை 31ம் தேதி வரை பேருந்து சேவை இயக்கப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.