• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜூலை 14-ம் தேதி ‘ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள்’ – சேலம் கோட்டம்

June 7, 2017 தண்டோரா குழு

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில், 2017-ம் ஆண்டுக்கான வருட இடைக்கால ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள் ஜூலை 14-ம் தேதி நடைபெற உள்ளது என்று சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் பணியாளர் பிரிவு சார்பாக ஜூலை 14-ம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சேலம் கோட்ட அலுவலக வளாகத்தில் உள்ள பன்னோக்கு கருத்தரங்குக் கூடத்தில் இடைக்கால ஓய்வூதிய குறை தீர்ப்பு நாள் நடைபெற உள்ளது.

இந்த குறை தீர்ப்பு நாளில், ரயில்வே பணியில் இருந்த ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் இதர பயனாளிகள் தங்களுக்கு ஓய்வூதியம் குறித்து குறைகள் ஏதும் இருப்பின், அவற்றை கோட்ட பணியாளர் நல அலுவலர், சேலம் கோட்டம், தெற்கு ரயில்வே, சேலம் 636005, என்ற முகவரிக்கு முன்னதாகவே 12.06.2017க்குள் கடிதம் அனுப்பி தெரிவிக்கலாம்.

மேலும் இந்த ஓய்வூதிய குறை தீர்ப்பு நாளன்று நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறைகள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட குறைகள், ரயில்வே ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை தருவது குறித்த குறைகள், வாரிசு சான்றிதழ் மற்றும் பாதுகாவலர் சான்றிதழ் (Succession and Guardianship Certificate) பற்றிய குறைகள் மற்றும் விதிகள் சம்பந்தப்பட்ட குறைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க