• Download mobile app
05 Apr 2026, SundayEdition - 3707
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜீஎம் நகரில் தேருநாய்கள் தொடர்ந்து ஆடுகளை கடித்து குதறுகிறது பொதுமக்கள் வேதனை

July 5, 2022 தண்டோரா குழு

கோவை 84 வார்டு ஜீஎம் நகரில் தெரு நாய்கள் அதிகமாக இருந்து தொடர்ந்து ஆடுகளை கடித்து குதறுகிறது.

கோவை 84 வார்டு ஜீஎம் நகரில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி வருகிறது. அந்த பகுதியில் இருக்கும் தெரு நாய்கள் ஆடுகளை கடிப்பதை வழக்காக வைத்துள்ளது. இது குறித்து அப்படி மக்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஒரு ஆட்டை நாய்கள் ஆட்டை கடித்துவிட்டது.

நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டலசெயலாளர் அப்துல் வகாப் கூறுகையில்,

இதே இந்த பகுதியில் மனிதர்கள், குழந்தைகளையும் இது போல் கடித்தால் இப்படிதான் வேடிக்கை பார்க்குமா மாநகராட்சி
ஒரு வேளை ஆர்எஸ்புரம் இல்லை ரேஸ் கோர்ஸ் பகுதியாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பார்கள் காரணம் நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.84வது வார்டுமட்டுமல்ல கோவையில் உள்ள பல வார்டுகளிலும் இதே நிலைதான்.இந்த பகுதி ஏழை, எளியோர்கள் வசிக்கும் பகுதி அப்படி என்ற எண்ணத்தில் விட்டுவிடுகின்றார்கள் போல.

இதே நிலை நீடித்தால் கோவை மாநகராட்சி அலுவலகத்தைதான் முற்றுகை இடவேண்டும்.எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.சம்பந்தபட்ட மாநகராட்சி ஆணையர், உதவிஆணையர் அந்த வார்டின் மாமன்ற உறுப்பினர் இதற்க்கு பதில்தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க