February 3, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் குழுமம் கோவையில் 5 புதிய வீட்டுமனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வீட்டுமனைத் திட்டங்கள் குறித்து ஜி ஸ்கொயர் குழுமத்தின் நிறுவனரும் மற்றும் நிர்வாக இயக்குநருமான பாலா ராமஜெயம் கூறுகையில்,
இத்திட்டங்களில் 80-90% வீட்டுமனைகள் விற்பனையாகியுள்ளன.ஜி ஸ்கொயரின் வீட்டுமனைத் திட்டங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அமோக வரவேற்பு, மிக வேகமாக வளர்ச்சிக்கண்டு வரும் பகுதிகளில்,தேவைகள் அதிகமுள்ள மிகச்சரியான இடத்தில் அமைந்துள்ள வீட்டுமனைகளுக்கு இருக்கும் பெரும் தேவையைக் காட்டுகிறது.இத்திட்டங்கள் வீட்டுமனைகளை வாங்குபவர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சந்தை விலையை விடக் குறைவான விலையில் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் தங்களது கனவு இல்லத்தைக் கட்டுவதற்கான ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகின்றன.
பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், கமாடிட்டிகள், பத்திரங்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகை போன்ற பாரம்பரிய நிதி முதலீடுகளில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் சூழலில், முதலீட்டாளர்கள் நிலையான மற்றும் சொத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளைத் தேடி வரும் நேரத்தில் இந்த வீட்டுமனைத் திட்டங்கள் அறிமுகமாகியுள்ளன.நிலம் என்பது எப்போதும் ஒரு உறுதியான மற்றும் நீண்ட கால மதிப்பை உருவாக்கும் சொத்தாக இருப்பதால், ஜி ஸ்கொயரின் இந்தப் புதிய திட்டங்கள் சந்தை மதிப்பை விட மலிவான விலை, வலுவான அடிப்படை வசதிகள் மற்றும் எதிர்காலத்தில் மதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூரில், ஜி ஸ்கொயர் குழுமம் மாநகராட்சி எல்லைக்குள்ளேயே வீட்டுமனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இப்போது நிலம் கிடைப்பது மிக அரிதாகி வரும் கோயம்புத்தூர் சந்தையில் இது ஒரு அட்டகாசமான வாய்ப்பாகும்.கோயம்புத்தூரில் வீட்டுமனைத் திட்டங்கள் அமைந்துள்ள இடங்கள்:சூலூர் – கலங்கல் – ஒரு சென்ட் ₹4.9 லட்சம் முதல். எல்&டி பைபாஸ் – ஒரு சென்ட் ₹9.9 லட்சம் முதல். நஞ்சுண்டாபுரம் – ஒரு சென்ட் ₹16.9 லட்சம் முதல்.வடவள்ளி – ஒரு சென்ட் ₹11.9 லட்சம் முதல்.
அத்திபாளையம்– ஒரு சென்ட் ₹5.9 லட்சம் முதல்.அனைத்துத் திட்டங்களும் ப்ரீ-லான்ச் சலுகையின் ஒரு பகுதியாக 100% உறுதி அளிக்கப்பட்ட பலன்களுடன் அறிமுகப்படுத்தபப்ட்டுள்ளன.இந்தச் சிறப்பு விலை ஒவ்வொரு திட்டத்திலும் முதலில் முன்பதிவு செய்யும் 100 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
இந்த வீட்டுமனைத் திட்டங்கள் நன்கு கட்டமைக்கப்பட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதிகளில், முக்கிய சாலைகள் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளுடன் எளிதாக அணுகும் வகையில் அமைந்துள்ளன. மாநகர எல்லைக்குள் நிலம் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாலும், தேவை மிக அதிகமாக இருப்பதாலும், இந்தப் பகுதிகள் நீண்ட காலத்தில் சீரான மதிப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் வீடு கட்ட விரும்புபவர்களுக்கும், நீண்ட கால முதலீட்டை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கும் இத்திட்டங்கள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும் என்றார்.