• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் தொழில்நுட்ப உதவிகள் தேவை – இரும்பு வியாபாரிகள் கோரிக்கை

December 12, 2019

ஜி.எஸ்.டி வரி செலுத்துதல் மற்றும் திரும்ப பெறுவதில் தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுவதாக கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்ட இரும்பு வியாபாரிகள் சங்கத்தின் 75வது ஆண்டுவிழா கோவையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்கள் சங்கம் கடந்த 1945ம் ஆண்டு துவங்கப்பட்டது. சங்கத்தின் 75வது ஆண்டு விழா வருகின்ற 15ம் தேதி கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்களாக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் பல முக்கிய சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும், சொற்பொழிவுகளும், கலை நிகழ்ச்சிகளும், நடிகர் பாக்கியராஜ் தலைமையில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது.இந்திய நாட்டின் பல மாநிலங்களிளுக்கும், மாவட்டங்களுக்கும் இரும்பு களை சப்ளை செய்யும் அளவிற்கு கோவை இரும்பு வியாபார தொழில் முன்னேற்றம் அடைந்து உள்ளது. நாங்கள் ஜி.எஸ்.டி வரியை வரவேற்கிறோம். அதே நேரத்தில் ஜி.எஸ்.டி செலுத்துவற்கும், திரும்ப பெறுவதற்கும் தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது சங்கத்தின் துணை தலைவர் நடராஜன், நிர்வாக செயளாளர் முருகானந்தம், பொருளாளர் அண்ணாமலை, மலர்குழு தலைவர் சுபா சுப்பிரமணியன், கேட்டரிங் தலைவர் பிலிப்ஸ், மற்றும் நிர்வாகிகள் உசைனு, செந்தில், பாலசுப்பிரமணியன், வெங்கடேசஸ் முருகன், போஸ்கோ, துராவ் தேவராஜ் மற்றும் சங்கத்தின் உருப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க