• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிசிடி கல்லூரியை முற்றுகையிட்ட திமுக இளைஞர் அணியினர் கைது

October 15, 2020 தண்டோரா குழு

அண்ணா பல்கலைக்கழகத்தை கண்டித்து கோவையில் 6 மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி தலைமையில் ஜிசிடி கல்லூரி முற்றுகை போராட்டம் – தள்ளுமுள்ளு – வாக்குவாதம் – 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்ய்யப்பட்டனர்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி விலக வலியுறுத்தி, திமுக இளைஞரணி சார்பில், தமிழகம் முழுவதும், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் முன்பும், பொறியியல் கல்லூரிகள் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல், கோவை ஜிசிடி பொறியியல் கல்லூரி முன்பு, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி தலைமையில் முற்றுக்கை போராட்டம் நடைபெற்றது. அப்போது, சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி கோஷமிட்டப்படி கையில் பதாகைகளை ஏந்தியவாறு கல்லூரியை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது, காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி தடுத்தனர். இதனால், காவல்துறை மற்றும் திமுகவினர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பிடித்து இழுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது.இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க