• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜாலியன் வாலாபாக் படுகொலை 100வது ஆண்டு தினத்தையொட்டி இங்கிலாந்து வருத்தம் !

April 10, 2019 தண்டோரா குழு

ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்தியதற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்தார்.

இந்திய சுதந்திர வரலாற்றில் தற்போது வரை யாரும் மறக்க முடியாத நிகழ்வு என்றால் அது ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் தான். 1919 ஏப்ரல் 13-ம் தேதி பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பிரிட்டிஷ் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஜெனரல் டயர் என்பவனின் உத்தரவின்பேரில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 1000 பேர் உயிரிழந்தனர்; 1500 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையில், இந்த சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் ஜாலியன் வாலாபாக் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது அரசு சார்பில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த துயரசம்பவத்திற்கு முழுமையாக மன்னிப்பு கேட்பது எனவும் மன்னிப்பு கோருவதன் மூலம் இரு நாடுகளிடையே நட்புறவு வலுப்பெறும் என எம்.பிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் படிக்க