• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

38 ஆயிரம் கோடி மின் கட்டண தொகை ரசீதால் அதிர்ச்சி!

August 15, 2017 தண்டோரா குழு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் ஒருவருக்கு மின்கட்டணம் 38 ஆயிரம் கோடி என்று வந்த சம்பவம் அம்மாநிலத்தில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் நகரில் பி.ஆர். குஹா என்பவர் வசித்து வருகிறார். அவரால் சரியாக மின் கட்டணம் கட்டாததால், அவருடயை வீட்டில் மின்சாரம் நிறுத்தப்பட்டது என்று ஜார்க்கண்ட் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துவிட்டு, அவர் கட்ட வேண்டிய தொகையின் ரசீதை அவரிடம் தந்துள்ளனர். அந்த ரசீதில் குறிப்பிட்டிருந்த தொகையை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம், அதில் 38 ஆயிரம் கோடி என்று குறிப்பிட்டிருந்தது.

இவ்வளவு பெரிய தொகையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் வீட்டில் 3 அறை மட்டுமே உள்ளது. 3 மின்விசிறி, 3 லைட் மட்டுமே பயன்படுத்துவோம். சில நேரங்களில் மட்டுமே தொலைக்காட்சி பயன்படுத்துவோம். அப்படியிருக்க இவ்வளவு பெரிய தொகை எங்களுக்கு எப்படி வரும்?” என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. அந்த புகாரை ஏற்ற அவர்கள் ஜார்கண்ட் மின் நிலைய அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொண்டுள்ளனர். விரைவில் அது குறித்து சரியான தீர்வு கிடைக்கும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க