• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக அரசு மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

January 30, 2019 தண்டோரா குழு

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு ஆதரவாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் கோரிக்கை அட்டை கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கடந்த 21ம் தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி இருபத்தி ஒரு மாதகால நிலுவை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி 1000க்கும் மேற்பட்டோர் மாநிலம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 3 நாட்களுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வேலையில் ஈடுபடுவதாகவும் மீண்டும் மாநில கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க