• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜல்லிக்கட்டு நடத்தப்படும் அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் – உடுமலை ராதாகிருஷ்ணன்

February 14, 2019 தண்டோரா குழு

உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடத்தப்படும் அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. எதிர்கட்சியினரின் பல்வேறு கேள்விகளுக்கு ஆளும் தரப்பு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். மேலும், விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தானின் கோரிக்கைக்கு ஏற்ப, செஞ்சியில் உள்ள 12 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் உறுதி அளித்துள்ளார். அதைபோல், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடத்தப்படும் அலங்காநல்லூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

மேலும் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் இயக்குநர் நியமிக்கப்படுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதில் அளித்துள்ளார்.

மேலும் படிக்க