• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பான் மன்னர் பதவி விலகல்?

June 10, 2017 தண்டோரா குழு

ஜப்பான் மன்னர் பதவி விலகுவது தொடர்பாக, அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா நிறைவேறியுள்ளது.

ஜப்பான் நாட்டின் மன்னர் அகிஹிட்டோ(83), தனது பணிக்கு இடையூறாக இருக்கும் உடல்நலப்பிரச்சனைகள் காரணமாக தனது பதவியிலிருந்து விலகுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தார். கடந்த 2௦௦ ஆண்டுகளில், ஜப்பான் நாட்டில் அரசர் பதவி விலகியது கிடையாது. ஜப்பான் நாட்டில் அரசர் பதவி விலகுவது இதுவே முதல்முறை ஆகும்.

எனவே மன்னர் பதவி விலகுவது குறித்து, ஜப்பான் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. மன்னர் ஓய்வு பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டு, வரும் 2௦18ம் ஆண்டு நிறைவடையும்.

இது குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறுகையில்,

“அரசருக்கு பிறகு பட்டத்து இளவரசர் நருஹிட்டோ(57) பதவி ஏற்பார் என்று கருதப்படுகிறது. அரசருக்கு ஹிஸாஹிடோ என்னும் சிறிய இளவரசரும், திருமணமாகாத 7 மகள்களும் உண்டு. பெண்கள் தங்கள் தகுதிக்கு கீழுள்ள ஒருவரை திருமணம் செய்துக்கொண்டால், தங்களுடைய ராஜ அந்தஸ்தை விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால், ஆண் வாரிசுகளுக்கு இந்த கட்டாயம் கிடையாது” என்று கூறினார்.

மேலும் படிக்க