• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பான் நாட்டின் வான்வழியாக ஏவுகணை சோதனை செய்த வடகொரியா

September 15, 2017 தண்டோரா குழு

ஜப்பான் வழியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா இரண்டாவது முறையாக சோதனையை செய்தது.

சமீபத்தில் வடகொரியா ஹைட்ரோகேன் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இந்த சோதனைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதைத்தொடர்ந்து, ஐ.நா வின் பாதுகாப்பு கவுன்சில் கூடி, வட கொரியாவுக்கு பொருளாதார தடை விதித்தது.

இதற்கு பிறகு,வட கொரியா தனது ஏவுகணை சோதனையை கைவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வட கொரியா தொடர்ந்து தனது ஏவுகணை சோதனையை கைவிடாமல் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று(செப்டம்பர் 15) மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது.

இன்று சோதனை செய்யப்பட்ட ஏவுகணை வட கொரியாவின் மேற்கு கடற்பகுயிலிருந்து ஏவப்பட்டது. இந்த ஏவுகணை, ஜப்பான் நாட்டின் வான்வெளி வழியாக சென்று, எரிமிடோ தீபகற்பகத்தில் கிழக்கு பகுதியில் விழுந்தது.இதில் அங்கிருந்த துறைமுகத்திலிருந்த கப்பல்களுக்கோ அல்லது விமான நிலையங்களிலிருந்த விமானங்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை” என்று ஜப்பான் நாட்டின் தலைமை அமைச்சரவை செயலாளர் தெரிவித்தார்.

மேலும் படிக்க