ஜப்பானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்,வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி தலைவர் ஷின்சோ அபே மீண்டும் ஜப்பான் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம், 22ம் தேதி, ஜப்பானில் நாட்டின் பிரதமர் தேர்தல் நடந்தது.அந்த தேர்தலில் அபேவின் ஜனநாயக கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றது. இதையடுத்து, அபே மீண்டும் ஜப்பான் நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த ஆண்டு முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரைக்கும், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க தேவையான பட்ஜெட்டை அமைக்க, தற்போதைய அமைச்சர்களை மீண்டும் அபே நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அபிவிருத்தியை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக இணைந்து செயல்படவிரும்புவதாக, திங்கள்கிழமை(அக்டோபர் 3௦) அமெரிக்க குடியரசு தலைவர் டிரம்புடன் நடந்த தொலைபேசி உரையாடலில் அபே தெரிவித்தார்.
அமெரிக்காவின் குடியரசு தலைவராக டொனால்ட் டிரம்ப் குடியரசு தலைவராக பதவி ஏற்ற பிறகு, ஜப்பான் மற்றும் அமெரிக்க நாட்டின் தனிப்பட்ட உறவுகளை, இரு தலைவர்களும் உருவாக்கியுள்ளனர். டிரம்ப் நவம்பர் 5-7ம் தேதி, ஜப்பான் நாட்டிற்க்கு செல்லும் போது, அபேவுடன் கோல்ஃப் விளையாட திட்டமிடப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2௦12ம் ஆண்டு, டிசம்பர் மதம், தனது 63 வயதில் அபே, ஜப்பான் நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு