• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 2 ஆம் தேதி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் -மாற்றத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பு

December 24, 2019

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து வரும் ஜனவரி 2 ஆம் தேதி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என மாற்றத்திற்கான மாணவர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு அன்மையில் கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாற்றத்திற்கான மாணவர் அமைப்பினர் கோவை எஸ்.பி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பெற பெற வேண்டும் என வலியுறுத்தியும், டெல்லியின் கழிவுவறைக்குள் சென்று மாணவிகளை கொடூரமாக தாக்கியதை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

மேலும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடுத்துள்ளதால், வரும் ஜனவரி 2 ஆம் தேதி மாணவர் கூட்டமைப்பு சார்பாக மிக பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் செல்ல முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர், இதனால் சிறிய தள்ளு முள்ளு ஏற்பட்டது இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் படிக்க