• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு !

December 27, 2018 தண்டோரா குழு

ஜனவரி 17 ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதிலும் குறிப்பதாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி உலக அளவில் புகழ் பெற்றது. அவ்வகையில் அடுத்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படுகிறது.
இதன்படி, ஜனவரி 15 ம் தேதி மதுரை – அவனியாபுரத்திலும், ஜனவரி 16 ம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 17 ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க