• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோதனை மூலம் மிரட்டும் வேலை எங்களிடம் நடக்காது – துரைமுருகன்

March 30, 2019 தண்டோரா குழு

சோதனை மூலம் மிரட்டும் வேலை எங்களிடம் நடக்காது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நேற்று இரவு திடீரென வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுப்பட்டுனர். அப்போது, துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் இருந்தனர். சுமார் 5.30 மணி நேரம் சோதனை நடத்திய அதிகாரிகள் 2 பைகளில் ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.

பின்னர் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருன்,

எனது வீட்டில் சோதனை நடத்த வந்த அதிகாரிகள் மாற்றி மாற்றி பேசினர். இன்று அதிகாலை 3 மணியளவில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினார்கள். பின் திரும்பி சென்று விட்டார்கள்.வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்தின் வெற்றி பிரகாசமாக உள்ளது.பிரகாசமாக உள்ள வெற்றியை திசை திருப்பவே வருமான வரித் துறை சோதனை நடைபெற்றுள்ளது.தேர்தல் நேரத்தில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் என்ன?போன மாதம் எங்கள் வீட்டிக்கு வந்து சோதனை நடத்திருக்கலாமே.

எங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள திராணியில்லாமல் வருமான வரி துறை சோதனையை நடத்தி பூச்சாண்டி காட்டுகின்றனர். நாங்கள் மிசாவையே சந்தித்தவர்கள். சோதனை மூலம் மிரட்டும் வேலை எங்களிடம் நடக்காது. நாங்கள் அதற்கு பயப்பட மாட்டோம். தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் சோதனை நடத்துவதற்கான காலம் இதுவல்ல என கூறியுள்ளார்.

மேலும் படிக்க