February 3, 2018
தண்டோரா குழு
சொர்ணூர் – கண்ணூர் இடையேயான கோவை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சொர்ணூர் – கண்ணூர் இடையேயான கோவை வழி ரயில்கள் சேவை தண்டவாள பராமரிப்பு பணிகளால் மார்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கொல்லம் மற்றும் கோழிக்கோடு ரயில்வே நிலையங்கள் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் கோவையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு கண்ணூர் வழியாக மாலை 6.50 க்கு மங்களூரு செல்லும் பயணிகள் ரயிலும்,மங்களூருவிலிருந்து காலை 7.35 க்கும் கோவை வந்தடையும் பயணிகள் ரயிலும் சொர்ணூர்- கண்ணூர் இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த தண்டவாளப் பணிகள் வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால்,அது வரை இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.