• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சொன்னதை பாகிஸ்தான் செய்யவில்லை அதனால் தான் இந்த தாக்குதல் – இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே

February 26, 2019 தண்டோரா குழு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல்கள் கிடைத்ததால் தான் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பலரும் இந்திய விமான படைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.இதையடுத்து, இந்த ஏன் தாக்குதல் நடத்தியது என்பது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோக்லே விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் செயல்படும் பயங்கரவாதிகள் குறித்தும் தகவல் அளித்தோம். பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பாக போதுமான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்தியா வழங்கியது. ஆனால், இதனை பாகிஸ்தான் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை. 20 ஆண்டுகளாக பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம் செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானுக்கு தெரியாமல் தீவிரவாத அமைப்பு செயல்பட வாய்ப்பில்லை. தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜெயிஷ்-இ-மொஹம்மத் அமைப்பினர் இந்தியாவில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை நடத்தப்போவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த தாக்குதலை நடக்க விடாமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கு பிறந்த விடை தான் இந்த வான்வழி தாக்குதல். அதையேத் தான் எல்லைப்பகுதியில் நாம் இப்போது செய்து காட்டியுள்ளோம்”

“பலக்கோட் முகாமில் பதுங்கியிருந்த ஜெயிஷ்-இ-மொஹம்மத் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், சீனியர் கமாண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த முகாமானது ஜெயிஷ்-இ-மொஹம்மத் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மருமகன் தலைமையில் வழி நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு மிகவும் கவனமாக தாக்குதல் நடத்தினோம். இதனால் தான் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு பலக்கோட் பகுதியை நாங்கள் தேர்ந்தெடுத்து தாக்கினோம். தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே இந்த திடீர் தாக்குதலை நாங்கள் அரங்கேற்றினோம். தீவிரவாதிகளை தமது மண்ணில் அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் உறுதியளித்திருந்தது. உறுதி அளித்தபடி பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் மீது தாக்குதல் தேவைப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க