• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார் நடிகர் ஜெய்

October 7, 2017 தண்டோரா குழு

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர் ஜெய் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நடிகர் ஜெய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து நடிகர் நிதின் சத்யா தயாரிக்க இருக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் குடித்து விட்டு தனது காரினை போதையில் ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, இதையடுத்து அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று கூறப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை.

இதனால் தற்போது அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து ஆணையிட்டுள்ளது.மேலும், நடிகர் ஜெய்யை 2 நாட்களில் கைது செய்து ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்திரவிட்டது. இதையடுத்து, நடிகர் ஜெய் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

மேலும் படிக்க