• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

செஸ் போட்டியில் 12 வயதில் கிராண்ட்மாஸ்டரான சென்னை சிறுவன்

June 25, 2018 தண்டோரா குழு

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா என்ற 12 வயது சிறுவன்,செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த ரமேஷ்பாபு-நாகலட்சுமி தம்பதிகளின் இளைய மகன் பிரக்ஞானந்தா.சென்னை வேலம்மாள் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் பிரக்ஞானந்தாவிற்கு,சிறு வயதிலிருந்தே செஸ் விளையாடுவதில் ஆர்வம் இருந்து வந்துள்ளது.இதனால் சிறுவனின் தந்தை,செஸ் பயிற்சிக்கு அனுப்பி வைத்து அவனது திறமையை மேம்படுத்தியுள்ளார்.

பிரக்ஞானந்தா 2013ல் 8 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டியிலும், 2015-ம் ஆண்டில் 10 வயதுக்குட்பட்டோருக்கான செஸ் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.கிராண்ட் மாஸ்டராக மாற மூன்று நிலைகள் உள்ளன. அதன்படி கடந்த ஆண்டு உலக ஜூனியர் சாம்பியியன்ஷிப் போட்டியில் வென்ற அவர் தனது முதல் நிலையையும்,கிரீஸ் நாட்டில் நடந்த ரவுண்ட் ராபின் போட்டியில் வென்று இரண்டாவது நிலையையும் பிடித்தார்.பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டராக, 2ஆயிரத்து 500 புள்ளிகள் எடுக்க வேண்டி இருந்தது.

இந்நிலையில்,இத்தாலி நாட்டில் நடைபெற்ற கிரிடின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா கலந்துகொண்டார்.இதில்,8ஆவது சுற்றுப்போட்டியில் அவர்,ரேட்டிங்கில் 2 ஆயிரத்து 514 புள்ளிகள் பெற்று நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புருஜெஸ்சர்ஸ் ரோலாந்தை எதிர்கொண்டார்.இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.இதையடுத்து,பிரக்ஞானந்தா ரேட்டிங்கில் 2 ஆயிரத்து 500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதுமட்டுமின்றி உலகின் மிகக் குறைந்த வயதுடைய கிராண்ட் மாஸ்டர்கள் பட்டியலில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில், 2002-ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் முதலிடத்தில் உள்ளார்.12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்த பிரக்ஞானந்தாவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன்:

சிறுவன் பிரக்ஞானந்தாவின் சாதனை தமிழ்நாட்டிற்கும்,இந்தியாவிற்கும் கிடைத்த பெருமை என்று அவர் புகழாரம் சூடியுள்ளார்.

செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்:

பிரக்ஞானந்தாவுக்கு ட்விட்டர் மூலம் பாராட்டு தெரிவித்துள்ள ஆனந்த் அவரை விரைவில் சென்னையில் சந்திக்க ஆவலோடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க