• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செல்வபுரம் பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரொனா தொற்று உறுதி

July 6, 2020 தண்டோரா குழு

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரொன தொற்று உறுதியாகியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வந்த எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டில் கடை வைத்துள்ள 3 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் கோவை இ.எஸ். ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இவர்களில் பலர் வசித்து வந்த செல்வபுரம் அசோக் நகர், கோவிந்தசாமி லே அவுட் பகுதியில் 150க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து செல்வபுரம் அசோக் நகர், கோவிந்தசாமி லே அவுட் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. வாகனங்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் பொது மக்களில் சிலர் வேக வேகமாக உடமைகளை எடுத்துக்கொண்டு அந்த பகுதியில் இருந்து வெளியேறினர்.

கோவையில் நேற்று வரை தொற்று எண்ணிக்கை 741 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோவையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க