• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை சில்க்ஸ் கட்டத்தில் பயங்கர தீ விபத்து

May 31, 2017 தண்டோரா குழு

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டத்தில் பயங்கர தீ விபத்து.பல மணி நேரமாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து இன்று காலை ஏற்பட்டது. அதிகாலை நான்கு மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே பல மணிநேரம் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீ அணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தற்போது தீ கட்டத்தின் அனைத்து பகுதியிலும் பரவியுள்ள நிலையில் தரைத்தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறி வருவதால் தீயை அணைப்பதில் சிரமம் நீடிக்கிறது.

புகையை கட்டுப்படுத்தும் நவீன கருவி மூலம் தீயணைப்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். அருகிலுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தீ யனைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து நடந்த கடைக்குள் 2o பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுவரை 1௦ பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 4.45 மணியிலிருந்து துணிக்கடைக்குள் எரியும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், தரைத்தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறி வருவதால் தீயை அணைப்பதில் சிரமம் நீடிக்கிறது.

இதையடுத்து புகையை கட்டுப்படுத்தும் நவீன கருவி மூலம் தீயணைப்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். அருகிலுள்ள கடைகளுக்கு தீ பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் துணிகள் தீ எரிந்து நாசமாகிவிட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க