February 2, 2018
தண்டோரா குழு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என கடந்த 2006ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசின் பரிந்துரையை ஏற்பதில்லை என உச்சநீதிமன்றம்கடந்த 2012ல் முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் 2012ல் கோரிக்கையை பரிசீலித்து நிராகரித்தனர்.இதே கோரிக்கை 1997, 1999 என 2 முறை உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதுஎன்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.2012ம் ஆண்டில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.