• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையை போல சிற்றுந்து கோவையிலும் விரைவில் இயக்கப்படும் – அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

September 20, 2019 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணபலன்களை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் வழங்கினர்.

விழாவில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

போக்குவரத்து கழகம் என்றாலே மக்களுக்கு சேவை செய்யும் துறை. ஓரு நாளைக்கு 1.75 கோடி மக்களை ஏற்றி இறக்கி வரும் துறை.சேவை துறை என்பதால் வரவுக்கும் செலவிற்கும் இடைவெளி அதிகமாக இருக்கின்றது.தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான, பணபலன்கள் இந்த ஆட்சியில் வழங்கப்படுகின்றது. தனியார் போக்குவரத்து முதலாளிகளுக்கு இணையாக அரசு போக்குவரத்து சேவையும் இருந்து வருகின்றது.

சென்னையை போல சிற்றுந்து கோவையிலும் விரைவில் இயக்கப்பட இருக்கின்றது.ஜெர்மன் வங்கி மூலமாக 2000 மின்சார பேருத்தும், பி.எஸ்.6 பேருந்து 12 ஆயிரம் பேருந்துகளும் வாங்கப்பட்ட இருக்கின்றன்.820 மின்சார பேருந்துகள் முதல்கட்டமாக கோவை, சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இயக்கப்படும்.5844 புதிய பேருந்துகள் வாங்கப்பட இருக்கின்றது. தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகளும் நவீனபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,

சென்னையை போல கோவைக்கும் சிற்றுந்து இயக்க வேண்டும் என கேட்டு இருக்கின்றோம். பேருந்து பாடி கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. விரைவில் சிற்றுந்து இயக்கப்படும் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி கோவைக்கு ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. விரைவில் சிற்றுந்து திட்டமும் செயல்படுத்தபடும் என்றார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,

வருவாய்க்கும் செலவிற்கும் இடையில் வித்தியாசம் இருப்பதால் பணபலன்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது. தீபாவளியின் போது அதிக கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக
தகவல் கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம் தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கோவை, திருப்பூர் , பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து கூடுலாக கூட்டம் வரும் என்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அடுத்து நடைபெறும் கூட்டத்தில் எவ்வளவு பேருந்துகள் என்பது இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.புதிய மோட்டார் வாகன சட்டம் மக்களை பாதிக்கின்ற வகையில் இருப்பதால் அந்த கட்டணங்களை குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
பழைய அபராதம் கட்டணம் மட்டுமே தற்போது அமலில் உள்ளது. விரைவில் புதிய அபராத கட்டணம் குறைக்கப்படும் என கூறினார்.

நிகழ்ச்சியில், கோவை மண்டலத்திற்கு உட்பட்ட ஓய்வுபெற்ற 793 பணியாளர்களுக்கு ரூபாய் 164.79 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க