• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் பட்டப்பகலில் இளம்பெண் கொலை- பின்னணி என்ன ?

March 9, 2018 தண்டோரா குழு

சென்னை கே.கே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி அஸ்வினி.  இன்று வகுப்பு முடிந்து வீடு திரும்பிய போது, அவரை கல்லூரி வாயிலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார்.

இதில் படுகாயமடைந்த அஸ்வினியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதற்கிடையில், கத்தியால் குத்திய இளைஞரை பொது மக்கள் பிடித்து அடித்து  உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கொலைக்கான காரணம் என்ன ?

அஸ்வினி மதுரவாயலை சேர்ந்தவர். அதே பகுதியை சேர்ந்த அழகேசன், தண்ணீர் கேன் பிசினஸ் செய்துள்ளார். அவர் அஸ்வினி கல்லூரி செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அஸ்வினி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.  இதையடுத்து போலீசார், அழகேசனை கைது செய்திருந்தனர்.

பின்னர், அழகேசன் தொல்லையால் பாதிக்கப்பட்டு, மதுரவாயலை காலி செய்த அஸ்வினி, ஜாபர்கான்பேட்டையில் தங்கியிருந்து கல்லூரிக்கு வந்து படித்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த அழகேசன், பெரிய கத்தியொன்றை எடுத்து வந்து அஸ்வினியை குத்தி கொலை செய்துள்ளான்.

மேலும் படிக்க