May 4, 2020
தண்டோரா குழு
சென்னையை சேர்ந்த காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் காவல்துறையினர்,அரசு அவலர்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணாநகர் காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.இவர் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.கோயம்பேடு பகுதியில் அடிக்கடி ஆய்வுக்குச் சென்றநிலையில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கின்றன.ஏற்கனவே, காவலர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் அதிகாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.