• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் அம்மா உணவகத்தை சேதப்படுத்திய 2 பேர் திமுகவில் இருந்து நீக்கம்

May 4, 2021 தண்டோரா குழு

மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மதுரவாயல் பகுதியில்
உள்ள அம்மா உணவகத்திற்குள் புகுந்த திமுகவினர்,அங்கிருந்த அம்மா உணவகத்தின் பெயர் பலகைகளை பிடுங்கி, நடுரோட்டில் எறிந்து உடைத்து போட்டனர்.பின்னர் இனி அம்மா உணவகம் என்ற பெயரெல்லாம் கிடையாது என்று ஆவேசமாக கூறியபடி சென்றனர்.இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில்,உணவகத்தின் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் பொருத்தவும், 2 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க