May 26, 2020
தண்டோரா குழு
சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த 24 வயது இளைஞருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை துவங்கியது.இதையடுத்து, கோவைக்கு சென்னை,டெல்லி,பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து பலர் விமானம் மூலம் நேற்று மொத்தம் 360 பயணிகள் வந்தனர்.விமான நிலையத்தில் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சோதனை முடிவுகள் தெரியவந்தது.

இந்நிலையில்,சென்னையில் இருந்து
இண்டிகோ விமானம் மூலம் கோவை வந்து தனியார் ஓட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டது.எனினும் அந்த இளைஞர் உடன் வந்த மற்ற பயணிகளுக்கு தொற்று இல்லாத நிலையில் அவர்களை 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில்,கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் சென்னை நோயாளியாக கருதப்பட்டு அங்குள்ள பட்டியலிலேயே அவர் சேர்க்கப்படுவார் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்