• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சென்னையிலிருந்து கிளம்பும் 17 ரயில்கள் ரத்து

December 12, 2016 தண்டோரா குழு

வர்தா புயல் காரணமாக சென்னையிலிருந்து பெங்களூர், மதுரை, கோவை உட்பட பல நகரங்களுக்கு இயக்கப்படும் 17 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
வர்தா புயல் காரணமாக சென்னையில், பெரும் காற்றுடன் மழை கொட்டி வருகிறது.சென்னையில் மணிக்கு 192 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளன. 600-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ள நிலையில், அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

அதைப்போல சென்னை சென்டிரல், எழும்பூர் ரயில் நிலைய தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கீழ்கண்ட 17 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

ரயில் எண் 22637- சென்னை சென்ட்ரல்-மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 56001-சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் பேசஞ்சர்.
ரயில் எண் 12609-சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆர் பெங்களூர் எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 12712-சென்னை சென்ட்ரல்-விஜயவாடா பினாகினி எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 16053-சென்னை சென்ட்ரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 12679-சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 12695-சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 12607-சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆர் பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 52739-சென்னை சென்ட்ரல்-குடூர் பேசஞ்சர்.
ரயில் எண் 22860-சென்னை சென்ட்ரல்-பூரி வாராந்திர எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 16203-சென்னை சென்ட்ரல்-திருப்பதி கருடாத்திரி எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 12603 சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 12685 சென்னை சென்ட்ரல்-மங்களூர் எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 11042 சென்னை எழும்பூர்- சிஎஸ்டிஎம் எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 12635 சென்னை எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 12605 சென்னை எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ்.
ரயில் எண் 16105 சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்.

ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அதேபோல பல்வேறு நகரங்களிலிருந்து சென்னை வழியாக இயக்கப்படும் ரயில்கள் காட்பாடி வழியாக சென்னைக்குள் இயங்கப்படாமல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.மதுரை, பெங்களூரிலிருந்து வேறு மாநிலங்களுக்கு சென்னை வழியாக செல்லும் ரயில்கள் இவ்வாறு மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

வர்தா புயல் காரணமாக சென்னையிலிருந்து இயக்கப்படும் 17 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்து அறிவித்துள்ளதால் பயணிகள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் படிக்க