• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு 2 காவலர்கள் தீக்குளிக்க முயற்சி!’

March 21, 2018 தண்டோரா குழு

சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு  இரண்டு காவலர்கள்  மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றிவரும் ரகு, கணேஷ் என்ற இரு காவலர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் திடீரென தங்கள் கையில் வைத்திருந்த மண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது, டி.ஜி.பி அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் அவர்களை தடுத்தனர்.

தேனி மாவட்டத்தில் அவர்கள், பணியாற்றியபோது, சாதிரீதியாகப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், காரணமில்லாமல் தங்களை ராமநாதபுரத்துக்கு  பணியிடமாற்றம்  செய்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும்,ஜாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாக தேனி மாவட்ட எஸ்பி மற்றும் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மீது காவலர்கள் இருவர் குற்றம்சாற்றியுள்ளார்.இதையடுத்து, தீக்குளிக்க முயற்சி செய்த காவலர்களிடம், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

 

மேலும் படிக்க