• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

March 22, 2019 தண்டோரா குழு

சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ கனகராஜ் (64) நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அ.தி.மு.க.வினரிடையேயும், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் நேற்று உயிரிழந்ததையடுத்து, சூலூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் எண்ணிக்கை 21ல் இருந்து 22 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க