• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூர் எம்.எல்.ஏ உடலுக்கு முதல்வர் , துணை முதல்வர் நேரில் அஞ்சலி

March 21, 2019 தண்டோரா குழு

திடீர் மாரடைப்பால் இன்று காலை மரணமடைந்த சூலூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ. கனகராஜின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ கனகராஜ் (64) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.இன்று காலை நாளிதழ் படித்துக்கொண்டு இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.இதையடுத்து, குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.ஆனால்,வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அ.தி.மு.க.வினரிடையேயும்,சூலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்,அவரது உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,மறைந்த சூலூர் தொகுதி எம்.எல்.ஏ., கனகராஜின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.அவர்களுடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட பல்வேறு தொகுதி எம்.எல்.ஏ.க்களும் நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர்,கனகராஜின் குடும்பத்தினருக்கு தலைவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

“படிப்படியாக வளர்ந்தவர் கனகராஜ்.எளிமையாக பழகி அனைவரின் அன்பைப் பெற்றவர்.இவர் சிறப்பான முறையில் கழகத்தில் பணியாற்றி உள்ளார்.இரண்டு முறை சுல்தான்பேட்டை ஒன்றிய கழக செயலாளராக இருந்து மக்களுக்கு பணியாற்றியவர்.மக்களுக்கான திட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் அன்பைப் பெற்றவர்.கழகத்திற்கு விஷ்வாஷமாக இருந்து பல்வேறு பொறுப்புகளைப் பெற்றவர்.சட்டமன்ற உறுப்பினராக இருந்து தற்போது உயிரிழந்திருக்கிறார்.இவரது இழப்பு கழகத்திற்கு பெரிய இழப்பாகும்.அவரை பிரிந்து வாழும் அவர்களது உறவினர்களுக்கும்,அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

மேலும் படிக்க