• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூர் ஊராட்சி ஒன்றியம் கரையாம்பாளையத்தில் குட்டை தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

August 21, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியம் கரையாம்பாளையம் கிராமத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குட்டை தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்.

மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு விவசாயத்திற்கென்று அதிக அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்தும், அதிக முக்கியத்துவம் அளித்தும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தமிழக முதல்வர் சட்டப் பேரவையில் 20.07.2019 அன்று விதி 110ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கிராமங்கள் தோறும் சிறுபாசன குளங்கள், குட்டைகள் மற்றும் ஊரணிகள் போன்ற நீர் நிலைகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களில் உள்ள 5,000 சிறுபாசன குளங்கள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும் 25,000 குட்டைகள் மற்றும் ஊரணிகளை தலா ஒரு லட்சம் மதிப்பீட்டிலும் தூர்வாரும் பணிகள் கூடுதல் சிறப்பு நிதியிலிருந்து ரூ.500 கோடி செலவில் மேற்கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களில் உள்ள 5,000 சிறுபாசன குளங்கள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும் 25,000 குட்டைகள் மற்றும் ஊரணிகளை தலா ரூ.2.லட்சம் மதிப்பீட்டிலும் நீர் உள்ளே வரும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் அமைப்புகள் ஏற்படுத்தவும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் ரூ.750.00 கோடி செலவிலும் மொத்தமாக ரூ.1250.00கோடி செலவில் சிறுபாசன குளங்கள் குட்டை மற்றும் ஊரணிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 3 சிறுபாசன குளங்கள் மற்றும் 210 குட்டை ஊரணிகள் தூர்வரும் பணிகள் ரூ.225.00லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. சூலுர் வட்டாரம் மயிலம்பட்டி கிராம ஊராட்சியில் கரையாம்பாளையம் கிராமத்தில் குட்டை தூர்வாரும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் நீர் ஆதாரங்களை செம்மைப்படுத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2019-20 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு முழுவதும் 1829 பணிகள் ரூ.499.68 கோடி மதிப்பீட்டில் குடிமரமாத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ள தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 45 பணிகள், ரூ.7.43கோடியில் செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, நீர் வள ஆதாரத்துறை மூலம் பதிவு பெற்ற பாசன சங்கங்கள் நீர் பயன்படுத்துவோர் சங்கங்கள் பாசனதாரர்கள் தொகுப்பு வாயிலாக பணிகளை செயல்படுத்திட அரசு உரிய வழிமுறைகள் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கால்வாயில் வளர்ந்துள்ள செடிகொடிகள் முட்புதர்களை அகற்றுதல், கால்வாயினை தூர் வாரி சுத்தம் செய்தல், கால்வாயில் சேதமடைந்துள்ள குறுக்கு கட்டங்களை பழுது பார்த்தல், பழுதடைந்த மடைகளை சீரமைத்தல், பழுதடைந்த ஷட்டர்களை புதுப்பித்தல், கால்வாய் கரைகளை பலப்படுத்துதல், குளங்களின் கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பங்கேற்பு பாசன மேலாண்மையில் விவசாயிகள் தங்களை செவ்வனே ஈடுபடுத்தி பங்களிப்பாக மதிப்பீட்டுத் தொகையில் 10 சதவீதம் பணமாகவோ, மனித உழைப்பாகவோ அல்லது பொருளாகவோ வழங்கிடவும், 90 சதவீதம் அரசின் நிதியாகவும் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதனை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் கடந்த 14.07.2019 அன்று சூலூர்வட்டம், இருகூர் மற்றும் நீலாம்பூர் வழங்கு வாய்க்காலில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பு மூலம்; குடிமராமத்து திட்டத்தின் கீழ், குடிமராமத்து பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள இத்திட்டமானது அந்தந்த பகுதி விவசாயிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.அரசு அலுவலர்கள் குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதுடன் வாய்க்கால்களில் நீர் செல்வதற்கான வழிகளை கண்காணித்திட வேண்டும். வாய்க்கால்களில் நீர் செல்லும்போது வேறு எங்கும் அதிகளவில் நீர் விரையம் ஆகாமல் சரிசெய்யவேண்டும்.

குடிமராமத்து திட்டத்தின் மூலம் வாய்க்காலில் வரும் நீரை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வருமானத்தை பெருக்கிக் கொள்வதுடன் தங்கள் பகுதிகளின் நிலத்தடி நீரைத் தேங்கச் செய்யும் வகையில் மழைநீர் சேமிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பருவ மழை காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிப்பதன் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம் என கூறினார்.

மேலும் படிக்க