• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூலூர் இடைத்தேர்தல் தேர்தல் பறக்கும் படையினரால்13 லட்சம் ரொக்கம் பறிமுதல்

May 4, 2019 தண்டோரா குழு

சூலூர் இடைத்தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ. 13 லட்சம் ரொக்கம் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறைகள் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக, உரிய ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள், அந்தந்த தொகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்டு, தொடர்புடைய கருவூலங்களில் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணங்களில் இன்றி ரூ. 10 லட்சத்திற்கும் மேல் கொண்டு செல்லப்பட்டால், அது வருமான வரித்துறையினரின் ஒப்படைக்கப்படும்.

தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபின் கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை எவ்வித ஆவணங்களுமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.13,05,170 கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட சார்நிலை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்படும் தொகை மற்றும் இதரப் பொருட்களுக்கு உரிய ஆவணங்களை சம்மந்தப்பட்டவர்கள் சமர்ப்பித்தபின் மாவட்ட கண்காணிப்புக்குழுவின் பரிந்துரையின்படி விடுவிக்கப்படும். மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும், கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க