• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூலூரில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தை மாயம்

October 9, 2019 தண்டோரா குழு

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தை மாயமானது குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்.(36). இவரது மனைவி கவிதா.இவர்களுக்கு வெற்றிவேல் (7) என்ற மகனும் சாமினி என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளனர். ஜெயக்குமார் அவரது மனைவி கவிதா அதே ஊரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சாமினி திடீரென மாயமானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாததால் அவரது பெற்றோர்கள் நேற்று சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரித்து விட்டு போப்ப நாயை வரவழைத்து சோதனை செய்தனர்.மோப்ப நாய் சிறிது தூரம் சென்று அருகிலிருந்த கிணற்று அருகில் நின்று விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாலை வரை காணாமல் போன பெண்குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் நேற்று மாலை சூலூர் தீயணைப்புப் படையினரை வரவழைத்த போலீசார் அருகிலிருந்த சுப்பிரமணியம் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் தீயணைப்பு வீரர்களை இறக்கி சோதனை செய்தனர்.இருட்டும் வரை தேடிப்பார்த்தும் எந்த தகவும் கிடைக்கவில்லை.மேலும் குழந்தை காணாமல் போனது குறித்து அருகிலிருக்கும் வீட்டிலில் குடியிருக்கும் 2 வாலிபர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் 5 வயது பெண் குழந்தை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க